

மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் மஹாட் நகரின் கஜல்புரா பகுதியில் உள்ள ஒரு 5 மாடி குடியிருப்பு நேற்றிரவு 7 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. 35 குடியிருப்புகள் கொண்ட அந்த கட்டடம் இடிந்து விழுந்ததில் குழந்தைகள் உள்பட 20க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். இடிபாடுகளில் சிக்கிய இருவரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்ட நிலையில், எஞ்சிய 18 பேரின் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, கட்டட விபத்து சம்பவத்திற்கு குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.