மகா கும்பமேளா.. ரூ.10 கோடி அபராதமா? - சிக்கலில் யோகி அரசு

x

மகா கும்பமேளாவில் திறந்தவெளியில் மலம் கழிக்கும் விவகாரம் தொடர்பான மனுவுக்கு பதிலளிக்க உத்தரப்பிரதேச அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக நிபுன் பூஷண் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கும்பமேளாவில் ஒன்றரை லட்சம் பயோ டாய்லெட்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டாலும், புனித நீராட வரும் பக்தர்களுக்கு போதுமானதாக இல்லை. இதனால் கங்கை கரையோரங்களில் திறந்தவெளியில் மலம் கழிப்பதால் பொது சுகாதாரத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உத்தரப்பிரதேச அரசுக்கு 10 கோடி ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்