மதுராந்தகம் அருகே துணை விமான நிலையம்..?

மதுராந்தகம் அருகே துணை விமான நிலையம் அமைக்கப்பட உள்ளதாகவும் அதற்காக நிலம் கையகப்படுத்தப்படலாம் என்பதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
மதுராந்தகம் அருகே துணை விமான நிலையம்..?
Published on: 

மதுராந்தகம் மற்றும் செய்யூர் தாலுகாவுக்கு உட்பட்ட கொளத்தூர், ஆயகுண்ணம், தொழுப்பேடு, ஆத்தூர், தேனம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் துணை விமான நிலையம் வர இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் தங்கள் நிலம் பறிபோகும் என அச்சமடைந்துள்ள பொதுமக்கள், இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் அளிக்கவுள்ளதாக தெரிவித்தார்.

கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும், இல்லையென்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் இருப்பதாகவும் அவர்கள் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com