குழிபறித்த சக ஊழியர்... ஆத்திரமடைந்த செக்யூரிட்டி.. கையை துளைத்த தோட்டாக்கள்

மத்திய பிரதேசத்தில், பணியின்போது தூங்கியதை போட்டோ எடுத்த‌ ஊழியரை செக்யூரிட்டி துப்பாக்கியால் சுட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தூரில் நகைக்கடை ஒன்றில் இரவு நேர செக்யூரிட்டியான பிரமோத் பாண்டே என்பவர் (Pramod Pandey) பணியின்போது தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அவரை போட்டோ எடுத்த சஞ்சய் ஜெக்தாப் (Sanjay Jagtap) என்ற சேல்ஸ்மேன், சக ஊழியர்களுக்கு வாட்சப்பில் அனுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செக்யூரிட்டி பிரமோத் பாண்டே, வாக்குவாத‌த்தில் ஈடுபட்டு, திடீரென துப்பாக்கியால் சுட்டுள்ளார். கையில் காயமடைந்த சஞ்சய் ஜெக்தாப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பிரமோத் பாண்டேவை போலீசார் கைது செய்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com