மத்திய பிரதேச மாநிலம் தாமோ நகரை அடுத்துள்ள மடியடா கிராமத்தில், மாணவர்கள் பலர், தண்ணீர் பாயும் கரடு முரடான ஆற்றைக் கடந்து பள்ளிக்கு செல்லும் சூழல் உள்ளது. அங்கு பாலம் அமைக்க மக்கள் விடுத்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கிய பாலம் கட்டும் பணிகள் திடீரென கிடப்பில் போடப்பட்டுள்ளது. பாலம் கட்டும் பணிகளை மீண்டும் தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.