Madhya Pradesh Cm Air Balloon | ஏர் பலூனில் தீ விபத்து - நொடியில் தப்பிய ம.பி முதல்வர்

x

மத்திய பிரதேச மாநிலம் மான்ஸர் காந்தி சாகர் வனப்பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கான பல்வேறு நிகழ்ச்சிகளை மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அங்கிருந்த ஏர் பலூனில் அம்மாநில முதல்வர் பயணம் செய்ய முயன்றார். அப்போது திடீரென பலூனில் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக முதல்வரை பத்திரமாக கீழே இறக்கி தீயை அணைத்தனர். இதில் முதல்வர் உட்பட யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்