போபாலில் படகு விபத்தில் பலியானவர்களுக்கு நிதியுதவி - 11 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

மத்தியப் பிரதேச மாநிலம் கட்லாபுரா காட் பகுதியில் நேற்று படகு கவிழ்ந்த விபத்தில் இதுவரை 11 பேரின் உடல்களை அம்மாநில தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பினர் மீட்டுள்ளனர்.
போபாலில் படகு விபத்தில் பலியானவர்களுக்கு நிதியுதவி - 11 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
Published on
மத்தியப் பிரதேச மாநிலம் கட்லாபுரா காட் பகுதியில் நேற்று படகு கவிழ்ந்த விபத்தில் இதுவரை 11 பேரின் உடல்களை அம்மாநில தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பினர் மீட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள அம்மாநில முதலமைச்சர் கமல்நாத், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா நான்கு லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளார். இதனை 11 லட்சம் ரூபாயாக உயர்த்த அரசு திட்டமிட்டு உள்ளதாக செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com