lucknow railway station | இந்தியாவில் ரயில் நிலையத்தை அழிக்க பாக். சதி செய்தது அம்பலம்

இந்தியாவில் ரயில் நிலையத்தை அழிக்க பாக். சதி செய்தது அம்பலம்

இந்தியாவில் ரயில் நிலையத்தை அழிக்க பாக். சதி செய்தது அம்பலம்

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோ ரயில் நிலையத்தை வெடிகுண்டுகள் மூலம் தகர்க்க முயன்ற பயங்கரவாதச் சதி முறியடிக்கப்பட்டுள்ளது. மீரட்டைச் சேர்ந்த சாகிப் என்ற டெவில் மற்றும் அவனது கூட்டாளிகளை உ.பி. அதிரடிப்படை அதிரடியாகக் கைது செய்தது. சமூக வலைதளம் வாயிலாகப் பாகிஸ்தானை சேர்ந்தவர்களுடன் தொடர்பில் இருந்த இவர்கள், நாசவேலைகளில் ஈடுபட்டு அந்த வீடியோக்களை அனுப்பி கிரிப்டோ கரன்சி மற்றும் க்யூ ஆர் கோடு மூலம் பணம் பெற்றுள்ளனர். துபாயில் இருக்கும் ஒருவரின் தூண்டுதலால் இந்தச் சதி அரங்கேற்றப்பட்டதும், முக்கிய அரசியல் தலைவர்களைக் கண்காணிக்க இவர்கள் திட்டமிட்டதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. கைதானவர்களை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com