டியோரிய மாவட்டத்தில், மருத்துவமனை ஒன்றில், உடல் நலம் பாதிக்கப்பட்ட முதியவர் இரண்டு நாட்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது பேரன் மற்றும் மகள் அவருடன் தங்கி இருந்தனர். இந்த நிலையில், முதியவரை பரிசோதனைக்கு அழைத்துச் செல்ல, மருத்துவமனை பணியாளர்கள் ஒவ்வொரு முறையும் 30 ரூபாய் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் முதியவரின் மகள் ஸ்ட்ரெச்சரை இழுக்க, பேரன் பின்னால் இருந்து தள்ளி செல்கின்றனர். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமான பரவியதை அடுத்து பணம் கேட்ட உதவியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.