ஆசை காதலன் இப்படிப்பட்ட ஆளா?.. உயிர் காதலால் பெண்ணுக்கு நேர்ந்த அவலம்- கேரளாவை நடுங்க விட்ட சம்பவம்

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், பிரணவ் சுரேஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார். சமீபத்தில் பிரணவ் மீது பல்வேறு குற்றப்பின்னணி இருந்ததை தெரிந்து கொண்ட அந்த பெண், பிரணவ்வை சந்தித்து பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். தொலைபேசியில் அழைத்தும் பெண் பதிலளிக்காததால், பிரணவ் ஆத்திரமடைந்துள்ளார். இதையடுத்து தனது 2 நண்பர்களுடன் சேர்ந்து, பெண்ணின் வீட்டிலுள்ள கண்ணாடி ஜன்னல்கள், பூந்தொட்டிகள் உள்ளிட்ட பொருட்களை பிரணவ் அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், பிரணவ் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com