நிற்காமல்... அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதிய லாரி - பறிபோனஉயிர்கள்
மத்திய பிரதேசத்தின் இந்தூரில் உள்ள ஏர்போர்ட் சாலையில் கட்டுக்கடங்காமல் லாரி ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்களை இடித்து தள்ளிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது..
இந்த விபத்தில் இருவர் உயிரிழந்த நிலையில், 11 பேர் படுகாயமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
தறிகெட்டு ஓடிய லாரியின் சக்கரத்தில் இரு சக்கர வாகனங்கள் சிக்கிய நிலையில், அந்த வாகனம் தீப்பிடித்ததில் லாரியில் தீ பரவியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த மத்திய பிரதேச முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
Next Story
