20 வாகனங்கள் மீது மோதிய லாரி -நொறுங்கிய கார்கள்..அந்த இடத்திலேயே பெண் பலி -20 பேர் நிலை?
20 வாகனங்கள் மீது மோதிய கண்டெய்னர் லாரி - பெண் பலி
புனே அருகே கண்டெய்னர் லாரி 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை - புனே தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கண்டெய்னர் லாரி முன்னால் சென்ற 20 க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது மோதியது. இந்த விபத்தில் 5க்கும் மேற்பட்ட கார்கள் அப்பளம் போல் நொருங்கியது. கோர விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். முதற்கட்ட விசாரணையில் கண்டெய்னர் லாரியில் பிரேக் பிடிக்காமல் போனதே விபத்திற்கான காரணம் என தெரிய வந்துள்ளது. விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
