Lorry Crash | கடைக்குள் பாய்ந்த லாரி - அநியாயமாக பறிபோன3 உயிர்கள்
ஆந்திராவில் சாலையோரக் கடைகள் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.நெல்லூர் என்.டி.ஆர் நகர் அருகே சாலையில் சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரக் கடைகள் மீது மோதியது. விபத்து நிகழந்த போது வாடிக்கையாளர்கள் இல்லாமல் வியாபாரிகள் மட்டும் கடையில் இருந்துள்ளனர். அந்த நேரத்தில் லாரி கடைகளுக்குள் புகுந்ததால் கடையில் இருந்த வியாபாரிகள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
Next Story
