நிதி மோசடி வழக்கு - வதேராவிடம் விசாரணை

லண்டனில் 17 கோடி ரூபாய் மதிப்பில் சொத்து வாங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா மீது, அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
நிதி மோசடி வழக்கு - வதேராவிடம் விசாரணை
Published on

லண்டனில் 17 கோடி ரூபாய் மதிப்பில் சொத்து வாங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா மீது, அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

இதனை மறுத்துள்ள வதேராவுக்கு முன்ஜாமின் வழங்கிய டெல்லி நீதிமன்றம் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அவரை அறிவுறுத்தியது.

இந்த நிலையில் நிதி மோசடி வழக்கில், ராபர்ட் வதேராவிடம் நேற்று 3வது நாளாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது வதேரா கூறிய தகவல்களை அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனர். பீகானிரில் நடந்த நில மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் வதேரா 12ம் தேதி மீண்டும் ஆஜராவார் என தெரிகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com