நிதி அமைச்சர் எங்கே என கொந்தளித்த எதிர்க்கட்சிகள் - சட்டென அமைச்சர் என்ட்ரி கொடுத்ததும் மாறிய காட்சி

x

மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இல்லாதது குறித்து எதிர்க்கட்சிகள் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர்.

மக்களவையில் கேள்வி நேரத்திற்கு பிறகு மத்திய பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கிய நிலையில், நிதி அமைச்சர் அவைக்கு வர வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர். இதை தொடர்ந்து, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டதும் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. முன்னதாக பட்ஜெட் மீதான விவாதத்தில் நிதி அமைச்சர் இருப்பது மரபு தானே தவிர அது விதி அல்ல என மக்களவைத் தலைவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்