Lok Sabha | Cough Medicine | `இது இருந்தால் தான் இனி இருமல் மருந்து கூட வாங்க முடியும்' -மத்திய அரசு
Lok Sabha | Cough Medicine | `இது இருந்தால் தான் இனி இருமல் மருந்து கூட வாங்க முடியும்' - மத்திய அரசு விதிமுறை நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இருமல் மருந்துகள் இனி மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இருந்தால் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும் என்ற விதிமுறையை மத்திய அரசு தீவிரபடுத்தியுள்ளது. வேலூர் தொகுதி எம்பி டி.எம். கதிர் ஆனந்த் எழுப்பிய கேள்விக்கு மக்களவையில் எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் அனுபிரியா படேல் இதனைத் தெரிவித்தார். இதன்மூலம் கிராமப் பகுதிகளில் இருமல் மருந்துகளைச் சீட்டு இல்லாமல் விற்க வழங்கப்பட்டிருந்த சிறப்பு விலக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், கடந்த சில ஆண்டுகளில் லட்சக்கணக்கான மருந்து மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு, தரமற்ற மற்றும் போலி மருந்துகள் கண்டறியப்பட்டு ஆயிரக்கணக்கான வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். சர்வதேச தரத்திலான உற்பத்தி கட்டாயமாக்கப்பட்டு, போலி மருந்துகள் விற்பனையைத் தடுக்கக் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
