அமலுக்கு வந்தது முதல்கட்ட ஊரடங்கு தளர்வு

கர்நாடகாவில் புதிய விதிமுறைகளுடன் முதல்கட்ட ஊரடங்கு தளர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
அமலுக்கு வந்தது முதல்கட்ட ஊரடங்கு தளர்வு
Published on

கர்நாடகாவில் 10 மாவட்டங்களில் கொரோனா வரைஸ் தொற்று இல்லை என்றும் 198 வார்டுகளை கொண்ட பெங்களூருவில் 32 வார்டுகளில் மட்டுமே தொற்று இருப்பதாகவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, தொற்று இல்லாத பகுதிகளில் விவசாயம் மற்றும் மீன்பிடி தொழிலுக்கு எவ்வித தடையுமின்றி முழுவதுமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பாதிப்பு இல்லாத பகுதிகளில் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த தொழிற்சாலைகள், மெட்ரோ ரயில், சாலை, நீர்வள மேலாண்மை, வீடு மற்றும் தொழிற்சாலை கட்டுமான பணிகளை புதிதாக தொழிலாளர்களை கொண்டு வராமல் இருக்கும் தொழிலாளர்களை வைத்து மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரீசியன், பிளம்பர், தச்சுத் தொழில், மோட்டார் மெக்கானிக் மற்றும் கொரியர் தொழிலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com