LJK| Jose Charles Martin | புதுச்சேரி போலி மருந்து விவகாரம் - ஜோஸ் சார்லஸ் மார்டின் வலியுறுத்தல்
புதுச்சேரி போலி மருந்து விவகாரம் - ஜோஸ் சார்லஸ் மார்டின் வலியுறுத்தல்
புதுச்சேரி போலி மருந்து விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆட்சியை கலைத்து கவர்னர் ஆட்சியை அமல்படுத்த வேண்டுமென, லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தெரிவித்தார்.
புதுச்சேரியில் போலி மருந்து முறைகேடு தொடர்பாக மாபெரும் பேரணி நடத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜோஸ் சார்லஸ் மார்டின், இந்த விவகாரத்தில் 500 கோடி முதல் 1000 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாகவும், இதுகுறித்து வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
Next Story
