பீகார் சிறையில் கைதிகள் மது விருந்து - வெளியான அதிர்ச்சி வீடியோ

x

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள மசார்ஹி சிறையில் கைதிகள் சிலர் ஒன்றாக அமர்ந்து மதுபானம் அருந்தும் வீடியோ வெளியாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சிலர் போதைப்பொருட்களையும் பயன்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

மதுவிலக்கு அமலில் உள்ள பீகாரில் சிறைக்குள் கைதிகள் மதுபானம் அருந்தியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், சிறைக்குள் இருந்தவாறு கைதிகள் தங்கள் செல்போன் மூலம் இதை சமூக வலைத்தளங்களில் நேரலையாகப் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருப்பது சிறை நிர்வாகம் குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது. இது மோசமான நிர்வாகத்திற்கான அடையாளம் என காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்