செல்ஃபி எடுக்க சென்ற ரசிகைக்கு Lip Kiss..? வைரல் வீடியோவின் உண்மையை உடைத்த உதித்...

x

1980 களில் playback singer- ஆக அறிமுகமான உதித் நாராயண் தமிழ், இந்தி, தெலுங்கு, போஜ்புரி, கன்னடம், நேபாளியென மொத்தம் 36 மொழிகளில், 25000-கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார்.

கோடிக்கணக்கான ரசிகர்களை வைத்திருக்கும் இந்த பேன் இந்தியன் பாடகருக்கு நான்கு தேசியவிருது, ஐந்து பிலிம்ஃபேர் விருது, மற்றும் நாட்டின் உயரிய விருதான பத்ம ஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் விருதுகள் அளித்து கெளரவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மைக்கேல் ஜாக்ஷன் பிரபுதேவாவின் நடனத்திற்கே டஃப் கொடுத்தவர் உதித் எனும் சொல்லும் அளவிற்கு 1990 களில் உதித் பாட, அதற்கு மாஸ்டர் ஆட திரையரங்கமே அதிர்ந்தது.

உதித் நாராயண் எந்த நடிகருக்காக பாடினாலும், அது அந்த நடிகருடைய சொந்த குரலை போன்றே திரையில் பிரதிபலிக்கும் மேஜிக் அவரிடமிருந்தது.

பொதுவாக மெலடி பாடுபவர்களுக்கு, குத்துப்பாட்டு செட் ஆகாது என பலரும் கருதுவார்கள். ஆனால், ஏழு ஸ்வரங்களும் என் பாடலுக்கு அடிமையென நிருபித்து காட்டினார் உதித் நாராயணன்.

மூன்று சகாப்தங்களை கடந்த பிறகு, இன்றும் முன்னணி நட்சத்திரங்களுக்கு தொடர்ந்து டூயட் பாடி கொண்டிருக்கும் இசையுலகின் எவர்க்ரின் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார்.

உதித் நாராயணின் டூயட் பாடல்களுக்கு கதாநாயகர்கள் ரொமன்ஸ் செய்வதை போலவே, அந்த பாடலை கச்சேரிகளில் பாடும் போது சிங்கர் உதித் நாராயணனும் பாடகிகளோடு மனம் உருகி ரொமான்ஸ் செய்வதை அவருடைய ஸ்டைல்லாக வைத்திருக்கிறார்.

சில சமயங்களில், கதாநாயகனின் கேரக்டராகவே மாறிவிடும் உதித் நாராயணன், உணர்ச்சிகளை கட்டுபடுத்த முடியாமல் மேடையிலேயே பாடகிகளுக்கு முத்தம் கொடுத்து அவருடைய இசை மீதான தாகத்தை தீர்த்துவந்தார்.

பொதுமேடையில் இவர் சோஷியலாக பழகும் இந்த அணுகுமுறை ஏற்கனவே கண்டனத்திற்குள்ளானது. இந்த சுழலில் தான், உதித் நாராயணன் அவருடைய ரசிகைகளுக்கு மானாவாரியாக முத்தம் கொடுத்து அனைவரையும் திக்குமுக்காட வைத்திருக்கிறார்.

உதித் நாராயணன் செல்ஃபி எடுக்க சென்ற ரசிகையின் உதட்டில் முத்தம் கொடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் கடும் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது..

அதுமட்டுமின்றி, இந்த சம்பவத்திற்கு முன்பாக மற்றொரு பொதுமேடையில் உதித் நாராயண், பாடகி ஸ்ரேயா கோஷலக்கும், அல்கா யாக்னிற்கும் ( Alka Yagnik ) கொடுத்த சர்ப்ரைஸ் முத்தங்களையும் தற்போது நெட்டிசன்கள் வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.

மேலும், அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்த பாடகிகள் இருவரும் உதித் நாராயணின் செயலை ரசிக்கவில்லை என்பது அவர்களுடைய ஃபேஸ் ரியாக்ஸனிலேயே வெளிபடுகிறதென நெட்டிசன்கள் அந்த வீடியோக்களை Slow Motion-னில் Decoding செய்து வருகின்றனர்.

இது தொடர்பாக ஊடகங்களில் மனம் திறந்துள்ள உதித் நாராயணன் இதனை ரசிகர்கள் மீதான பேரண்பாகவே பார்க்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். மேலும், தன்னுடைய ரசிகர்களுக்கு இந்த முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை என்பது நன்றாக தெரியுமென நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தன் வளர்ச்சியின் மீதான காழ்ப்புணர்ச்சியில் சில திட்டமிட்டு பழைய வீடியோக்களை தற்போது பகிர்ந்து வருவதாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி நீங்கள் என்னை எவ்வளவு கீழே இறக்கிவிட முயன்றாலும், நான் உங்களையே படிக்கட்டாக பயன்படுத்தி மேலே மேலே ஏறி போய்க்கொண்டே இருப்பேன் என்றும் பஞ்ச் அடித்திருக்கிறார்.

சிங்கரின் இந்த ஸ்டேட்மெண்ட் சமூக வலைதளத்தில் மேலும் சலசலப்பை அதிகப்படுத்தி உள்ளது. உதித் நாராயணின் முத்தங்களை பெறும் ரசிகைகளே அதனை சந்தோசமாக அனுபவிக்கும் போது, வயிற்றெரிச்சலில் சிலர் அதை ஆராய்ந்துக்கொண்டிருப்பதாகவும் பாடகருக்கு சிலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இத்தனை சர்ச்சைகளுக்கு மத்தியிலும் அடுத்த மாதம் நடக்கவிருக்கும் உதித் நாராயணின் இசை கச்சேரிகளுக்கான டிக்கெட் இப்பவே விற்று தீர்ந்துவிட்டதால் ரசிகர்கள் அனைவரும் முத்த மழையில் நனைய தயாராகி விட்டதாக சொல்லப்படுகிறது. வரக்கூடிய கச்சேரிகளில் கலந்துக்க கூடிய ஆண் ரசிகர்களும் “சாரோட பாட்டாட முக்கியம், அவர் அடிக்கிற கிஸ்ஸ பாருடா நாராயண“ என Troll செய்வதையும் பார்க்கமுடிகிறது.

...ப்ரித்... ( கிஸ்ஸிங் Troll )

இந்த விவகாரம் சமூக வலைதளத்தில் விஸ்வரூவ ரூபமெடுத்துள்ள நிலையிலும், சிங்கர் ஸ்ரேஷா கோஷலும், அல்கா யாக்னிக்கும் இதுவரை எந்தவொரு கருத்தையும் தெரிவிக்காமல் இருப்பது அனைவரும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக மாறியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்