Jammukashmir | பயங்கரவாதிகளுடன் நேரடி தொடர்பு... அரசு ஊழியர்களின் வேலையை காலி செய்து உத்தரவு
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்த ஐந்து அரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில், இவர்கள் லஷ்கர்-ஏ-தொய்பா (LeT), ஹிஸ்புல் முஜாஹிதீன் போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் நேரடி தொடர்பில் இருந்தது தெரிய வந்துள்ளது. இதை அடுத்து அரசு துறையில் ஆசிரியராகவும், ஆய்வக நிபுணராகவும், உதவி லைன் மேனாவும், வனத்துறை ஊழியராகவும், சுகாதாரத் துறையில் ஓட்டுனராகவும் பணியாற்றிய ஐந்து பேரை பணி நீக்கம் செய்து காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Next Story
