திருப்பதி மலைப்பாதை தடுப்பு சுவர் மீது ஓடிய சிறுத்தை | வைரலாகும் வீடியோ
திருப்பதி மலைப்பாதை தடுப்பு சுவர் மீது ஓடிய சிறுத்தை
திருப்பதி திருமலை செல்லும் பாதையில் உள்ள தடுப்பு சுவரில் சிறுத்தை ஒன்று ஓடிய காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவைச் சேர்ந்த பக்தர்கள் காரில் திருப்பதிக்கு சென்று கொண்டிருந்தபோது, மலைப் பாதையில் உள்ள விநாயகர் கோவிலுக்கு அடுத்து வனப்பகுதியை ஒட்டி இருந்த தடுப்பு சுவரின் மீது குட்டி சிறுத்தை ஒன்று இறையை எதிர்பார்த்து உட்கார்ந்திருந்தது.
சிறுத்தையை கவனித்த பக்தர்கள் அதன் அருகில் சென்று மெதுவாக காரை ஓட்டினர். இதனால் அச்சமடைந்த சிறுத்தை, தடுப்பு சுவர் மீது ஓடி வனப்பகுதிக்குள் குதித்து தப்பி சென்றது. பக்தர்கள் எடுத்த இந்த வீடியோ காட்சிகள் வேகமாக பரவிவருகிறது.
Next Story
