வளர்ப்பு நாயை கவ்விச்சென்ற சிறுத்தை - அதிர்ச்சி சிசிடிவி

x

கேரளாவில் குடியிருப்பு பகுதியில் நுழைந்த சிறுத்தை வளர்ப்பு நாயை கவ்விச்செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.. இடுக்கி மாவட்டம் மூணாறு தேவிகுளம் சென்டர் டிவிஷனில் வசித்து வருபவர் ரவி. காலை எழுந்ததும் தனது வளர்ப்பு நாயை காணவில்லை என தேடிய போது, எங்கும் கிடைக்காததால் சிசிடிவி காட்சிகளை சோதனையிட்ட போது அதிர்ச்சியடைந்தார். அதிகாலை 3 மணி அளவில் சிறுத்தை ஒன்று வளர்ப்பு நாயை கடித்து கவ்விக்கொண்டு செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.


Next Story

மேலும் செய்திகள்