Kuno cheetah KGP12 | 4 குட்டிகளை ஈன்றது சிவிங்கிப்புலி.. உயிரியலில் பெரும் மைல்கல்..!

4 குட்டிகளை ஈன்றது சிவிங்கிப்புலி.. உயிரியலில் பெரும் மைல்கல்..!

Kuno cheetah KGP12 | இயற்கையின் அதிசயம்.. 4 குட்டிகளை ஈன்றது சிவிங்கிப்புலி.. உயிரியலில் பெரும் மைல்கல்..! #Kuno #Cheetah #KGP12 #Zoology #India மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசிய பூங்காவில் இந்தியாவிலேயே பிறந்த சிவிங்கிப்புலி ஒன்று நான்கு குட்டிகளை ஈன்றுள்ளது. "ப்ராஜெக்ட் சீட்டா" திட்டத்தின் கீழ், இந்தியாவில் பிறந்த பெண் சிவிங்கிப்புலி, காட்டில் இயற்கையான முறையில் இனப்பெருக்கம் செய்து குட்டிகளை ஈன்றது இதுவே முதல் முறையாகும். நான்கு குட்டிகளை ஈன்ற சிவிங்கிப்புலி, தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்ட ‘காமினி' என்ற சிவிங்கிப்புலியின் வம்சத்தைச் சேர்ந்தது. இந்தியாவின் இயற்கைச் சூழலுக்கு சிவிங்கிப்புலிகள் வெற்றிகரமாகத் தகவமைத்துக் கொண்டு இனப்பெருக்கம் செய்து வருவதற்கு இந்த நிகழ்வு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தை மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் பகிர்ந்து, குனோ தேசிய பூங்கா மற்றும் திட்டக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com