தமிழகத்தில் ஹஜ் குழுவிற்கு, மாநில அரசு வழங்கும் மானியத்தொகை கூடுதலாக 20 லட்சம் ரூபாய் உயர்த்தப்படும் என்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி, சட்டப்பேரவையில் அறிவித்தார். இதன்படி, ஹஜ் மானியத்தொகை 30 லட்சம் ரூபாயில் இருந்து 50 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என்று அமைச்சர் வளர்மதி விளக்கம் அளித்தார்.