கடைசி நேரத்தில் வந்த தடை - ஹெலிகாப்டரில் சென்று தேர்வெழுதிய மாணவர்கள்
உத்தரகாண்டில் நிலச்சரிவால் சாலைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் ஹெலிகாப்டரில் சென்று தேர்வெழுதியுள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஓமாராம் ஜாட், மங்காராம் ஜாட், பிரகாஷ் கோத்ரா ஜாட், நர்பத் குமார் ஆகிய 4 மாணவர்களும் உத்தரகாண்டில் பி எட் படித்து வருகின்றனர். இவர்களுக்கு தேர்வு மையம் உத்தரகாண்டில் ஒதுக்கப்பட்டிருந்தது. இதற்காக வாடகை காரை எடுத்த நிலையில் நிலச்சரிவால் தேர்வு மையத்திற்கு செல்ல முடியாமல் போனது.. ஆனால் அந்த பகுதிக்கு ஹெலிகாப்டர் மூலம் செல்லும் வசதி இருந்ததால் அவர்கள் நால்வரும் ஹெலிகாப்டரில் சென்று தேர்வெழுதினர். இதற்காக அவர்கள் தலா 30 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
