கடைசி நேரத்தில் ரத்தான இண்டிகோ ஃப்ளைட்... வீடியோ காலில் நடந்த வரவேற்பு

x

இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்ட நிலையில், கர்நாடக மாநிலம் ஹுப்ளியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று சுவாரஸ்யமாக நடந்துள்ளது.

பெங்களூருவில் சாப்ட்வேர் இன்ஜினியர்களாக பணிபுரியும் ஹுப்ளியை சேர்ந்த மேதா க்ஷீரசாகர் மற்றும் புவனேஷ்வரை சேர்ந்த

சங்கம் தாஸ், கடந்த மாதம் 23ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

ஹுப்ளியில் உள்ள மணமகள் வீட்டார் தரப்பில், மணமக்கள் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதனிடையே, புவனேஷ்வர்–பெங்களூரு–ஹுப்ளி இடையிலான இண்டிகோ விமான சேவை தொடர்ந்து தாமதமாகி, பின்னர் ரத்து செய்யப்பட்டது.

இதனால் மணமக்கள் வர முடியாத நிலை சூழல் ஏற்பட்டது. எனினும், நிகழ்ச்சியை ரத்து செய்யாத மணமகளின் பெற்றோர், தாங்களே மேடையில் அமர்ந்து வழக்கமான சடங்குகளை நடத்தினர்.

புவனேஷ்வரில் இருந்து மணமக்கள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நிகழ்ச்சியில் பங்கேற்றது கவனத்தை ஈர்த்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்