ஜோதிடரிடம் இருந்து ரூ.1.5 கோடி வாங்கியதாக புகார் - விசாரணைக்கு நேரில் ஆஜரானார் குட்டி ராதிகா

ஜோதிடரிடம் ஒன்றரை கோடி ரூபாய் பணம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியின் மனைவி குட்டி ராதிகா விசாரணைக்கு நேரில் ஆஜராகினார்.
ஜோதிடரிடம் இருந்து ரூ.1.5 கோடி வாங்கியதாக புகார் - விசாரணைக்கு நேரில் ஆஜரானார் குட்டி ராதிகா
Published on

ஜோதிடரிடம் ஒன்றரை கோடி ரூபாய் பணம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியின் மனைவி குட்டி ராதிகா விசாரணைக்கு நேரில் ஆஜராகினார். பெங்களூருவில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த யுவராஜ் என்பவரிடம் போலீசாரிடம் சிக்கினார். அப்போது அவரிடம் நடத்திய விசாரணையில் ஆன்லைன் பணப்பரிமாற்றத்தில் குட்டி ராதிகாவிற்கு அவர் ஒன்றரை கோடி ரூபாய் பணம் அனுப்பியது தெரியவந்தது. இதுதொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும் படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். அதன்பேரில் குட்டி ராதிகா நேரில் விசாரணைக்கு ஆஜராகினார். அப்போது படத்தில் நடிப்பதற்காக அவர் பணம் அனுப்பியதாகவும் வேறு எந்தவித தொடர்பும் இல்லை என தெரிவித்தார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக மேலும் சில நடிகைகளுக்கும் நோட்டீசு அனுப்ப மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com