மகா கும்பமேளா.. கங்கையில் புனித நீராடும் மக்களுக்கு எச்சரிக்கை | Kumbh Mela

x

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவையொட்டி கங்கையில் கோடிக்கணக்கானோர் புனித நீராடி வரும் நிலையில், அது குளிப்பதற்கு தகுதியற்றது என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அதிர்ச்சிகர அறிக்கை வெளியிட்டுள்ளது...

மகா கும்பமேளாவை ஒட்டி உலகம் முழுவதிலும் இருந்து வரும் கோடிக்கணக்கான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்...

ஆனால் கங்கையில் பல்வேறு இடங்களில் faecal bacteria அதிகளவில் நிறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...

மனிதர்கள் மற்றும் விலங்குகளின் மலக்குடலில் உருவாகுபவை தான் faecal bacteriaக்கள்...

கங்கையில் அதிக அளவு மல பாக்டீரியாக்கள் இருப்பது குறித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கவலை தெரிவித்துள்ளது...

இதுகுறித்து உ.பி. மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் விரிவான அறிக்கை கோரப்பட்டுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்