"குலசேகரபட்டினத்தில் 2வது ராக்கெட் ஏவுதளம்" - மத்திய அமைச்சர் ஜிதேந்திரசிங் மக்களவையில் பதில்

நாட்டின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணி தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
"குலசேகரபட்டினத்தில் 2வது ராக்கெட் ஏவுதளம்" - மத்திய அமைச்சர் ஜிதேந்திரசிங் மக்களவையில் பதில்
Published on

நாட்டின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணி தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய அணுசக்தி மற்றும் விண்வெளி அமைச்சர் மக்களவையில் ஜிதேந்திரசிங், அளித்துள்ள எழுத்துப்பூர்வ பதிலில், விண்வெளித் துறையின் வேண்டுகோளின்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 962 ஹெக்டேர் நிலத்தை தமிழக அரசு இதற்காக அடையாளம் கண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இவற்றில், 432 ஹெக்டேருக்கு நில கணக்கெடுப்பு முடிக்கப்பட்டு பூர்வாங்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com