கோட்டயம்: தனியார் பேருந்தில் சிக்கி 2 இளம்பெண்கள் பரிதாப பலி

கோட்டயம்: தனியார் பேருந்தில் சிக்கி 2 இளம்பெண்கள் பரிதாப பலி

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் பாம்பாடி அருகே பதின்மூன்றாம் மைல் பகுதியில், ஸ்கூட்டரில் சென்ற இரண்டு இளம் பெண்கள் தனியார் பேருந்தில் சிக்கித் தலை நசுங்கிச் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

கோட்டயம் – குமுளி சாலையில் பொன்குன்னம் நோக்கிச் சென்றபோது, முன்னால் சென்ற கார் திடீரென பிரேக் போட்டதால் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்த இருவர் மீதும் பின்னால் வந்த பேருந்து ஏறி இறங்கியுள்ளது.

விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள பாம்பாடி போலீசார், பேருந்தின் டேஷ் கேமரா மற்றும் அப்பகுதியிலுள்ள சிசிடிவி பதிவுகளைக் கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com