Korea | Crime | கொரிய காதலனை கத்தியால் சரித்த இந்திய பெண் - லிவ்-இன் உறவில் நேர்ந்த பயங்கரம்
கொரிய காதலனை கத்தியால் குத்திக் கொன்ற பெண் கைது
உத்தரப் பிரதேசம் மாநிலம் கிரேட்டர் நோய்டா பகுதியில் மணிப்பூரைச் சேர்ந்த பெண் தனது கொரிய காதலனை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... கொரியாவைச் சேர்ந்த டக் ஹி யூவும்,
மணிப்பூரை சேர்ந்த லுஞ்சேனா புமாயும் 2 ஆண்டுகளாக லிவ் இன் டு கெதர் முறையில் வாழ்ந்து வந்த நிலையில், டக் ஹி யு குடித்து விட்டு அடிக்கடி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அதேபோல் மது அருந்திவிட்டு தகராறு ஏற்பட்ட நிலையில், டக் ஹி யுவை புமாய் கத்தியால் குத்தி கொன்றுள்ளார். போலீசார் புமாயை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
