Kollywood News | வெடிக்கும் பிரளயம் - தயாரிப்பாளர்களுக்கு எதிராக திரும்பிய தியேட்டர் ஓனர்கள்
Kollywood News | வெடிக்கும் பிரளயம் - தயாரிப்பாளர்களுக்கு எதிராக திரும்பிய தியேட்டர் ஓனர்கள்
Summary
8 வாரங்களுக்கு பிறகு ஓடிடியில் வெளியாகும் படங்களை மட்டுமே தாங்கள் திரையிடுவோம் என, திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற தயாரிப்பாளர்கள் சங்க கூட்டத்தில், ஓடிடி வெளியீட்டை 8 வாரங்களுக்கு பிறகே செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தயாரிப்பாளர்கள் தீர்மானங்களை நிறைவேற்றலாம், ஆனால் எங்களைக் கட்டுப்படுத்த முடியாது என, திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறியுள்ளார்.
