பாலியல் வழக்கு.. கொல்கத்தா ஐகோர்ட் அதிர்ச்சி தீர்ப்பு.. அதிரடி காட்டிய சுப்ரீம் கோர்ட்

வளர் இளம் பெண்கள், பாலியல் வேட்கையை கட்டுப்படுத்த வேண்டும் என யோசனை தெரிவித்த கொல்கத்தா உயர்நீதிமன்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

மைனர் சிறுமியுடன் பாலியல் உறவு வைத்து கொண்ட 20 வயது இளைஞரை விடுவித்த கொல்கத்தா உயர்நீதிமன்றம்,

வளர் இளம் பருவப் பெண்கள் பாலியல் வேட்கையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற யோசனை தெரிவித்து கடந்த அக்டோபரில் தீர்ப்பு கூறியது.

இத்தீர்ப்பு தொடர்பாக தானாக முன் வந்து விசாரணையை தொடங்கிய உச்சநீதிமன்றம், இன்று தீர்ப்பு கூறியது.

மைனர் சிறுமியுடன் பாலியல் உறவு வைத்து கொண்ட 20 வயது இளைஞரை விடுவித்த கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தது.

வளர் இளம் பருவப் பெண்கள் பாலியல் வேட்கையை கட்டுப்படுத்த வேண்டும் என யோசனை தெரிவித்த கொல்கத்தா உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்வதாக கூறியுள்ளது.

வளர் இளம் பருவமடைந்தோர் தொடர்புடைய வழக்குகளின் தீர்ப்பு எழுவது குறித்த வழிகாட்டுதல்களை அளித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com