NAGPUR | KOLATHUPOLICE | DRUGS நாக்பூரில் மாஸ் காட்டிய கொளத்தூர் போலீஸ் SPOTல் செய்த சம்பவம்

நாக்பூரில் மாஸ் காட்டிய கொளத்தூர் போலீஸ் SPOTல் செய்த சம்பவம்

NAGPUR | KOLATHUPOLICE | DRUGS நாக்பூரில் மாஸ் காட்டிய கொளத்தூர் போலீஸ் SPOTல் செய்த சம்பவம்

#NAGPUR #KOLATHURPOLICE #drugs

சென்னையில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையின் அடிப்படையில், இதன் பின்னணியில் இயங்கிய முக்கிய நபரைப் பிடிக்கக் கொளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் தங்கதுரை தலைமையிலான தனிப்படை போலீசார் வடமாநிலமான நாக்பூருக்கு விரைந்தனர். அங்குள்ள ஆசாத் நகர், அம்பேத்கர் மார்க் பகுதியைச் சேர்ந்த 27 வயதான தகசீன் அஹமத் அன்சாரி என்பவரைக் கைது செய்து சென்னை அழைத்து வந்து விசாரித்தனர்.இந்த விசாரணையில், நாக்பூரில் இருந்து கொரியர் மூலம் சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும் குறிப்பிட்ட முகவர்களுக்குத் தொடர்ந்து போதை மாத்திரைகள் பார்சல் செய்யப்பட்டு சப்ளை செய்யப்பட்டது அம்பலமானது. இதனைக் தொடர்ந்து தகசீன் அஹமத் அன்சாரியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்துள்ள கொளத்தூர் போலீசார், இந்த போதைப்பொருள் விற்பனைச் சங்கிலியில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com