ஏர்போர்ட்டை அலறவிட்ட ஒற்றை ஜீன்ஸ் பேண்ட்... திகைத்து நின்ற அதிகாரிகள் - தட்டி தூக்கிய போலீசார்

கேரளாவின் கொச்சி விமான நிலையத்தில், சுமார் ஒன்றரை கோடி மதிப்பிலான இரண்டரை கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். துபாயில் இருந்து வந்த பயணி ஒருவர், தான் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்டிற்குள், தங்கத்தை கடத்துவதற்கெனவே பிரத்யேகமாக வைக்கப்பட்ட பாக்கெட்டில் வைத்து தங்கத்தை கடத்த முயன்றிருக்கிறார். கடத்தலில் ஈடுபட்டது கன்னியாகுமரியை சேர்ந்த காதர் மொய்தீன் என்பது தெரியவர, அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com