இருதய அறுவை சிகிச்சையின் முன்னோடி கே.எம்.செரியன் மறைவு
பிரபல இதய அறுவை சிகிச்சை நிபுணர் கே.எம்.செரியன் காலமானார். அவருக்கு வயது 82... பத்மஸ்ரீ விருது வென்ற கே.எம்.செரியன், 53 ஆண்டுகளுக்கும் மேலாக இதய மருத்துவத் துறையில் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றியவர்... இந்தியாவின் முதல் பை-பாஸ் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்த சாதனையாளரான செரியன், ஏராளமான குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை செய்துள்ளார். செயலிழந்த இதயங்களை மீண்டும் துடிக்க வைத்து பலருக்கு மறுபிறவி அளித்துள்ளார். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Next Story
