வாட்ஸ் அப் வீடியோ மூலம் மக்களிடம் குறைகள் கேட்பு - துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மீண்டும் தொடங்கினார்

புதுச்சேரியில் வாட்ஸ் அப் வீடியோ மூலம் குறை கேட்பதை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மீண்டும் தொடங்கியுள்ளார்.
வாட்ஸ் அப் வீடியோ மூலம் மக்களிடம் குறைகள் கேட்பு - துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மீண்டும் தொடங்கினார்
Published on
புதுச்சேரியில் வாட்ஸ் அப் வீடியோ மூலம் குறை கேட்பதை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மீண்டும் தொடங்கியுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக குறை கேட்கும் நடவடிக்கையை நிறுத்தி வைத்திருந்த கிரண்பேடி வாரந்தோறும் மேற்கொள்ளும் திடீர் ஆய்வுகளிலும் ஈடுபடவில்லை. இந்நிலையில் திங்கள் முதல் புதன்கிழமை வரை மாலை 5 முதல் 6 மணி வரை வாட்ஸ் அப் வீடியோ அழைப்பு மூலம் மக்கள் குறைகள் கேட்கப்படும் என்று ஆளுனர் மாளிகை தெரிவித்துள்ளது. தொலைபேசியில் பதிவு செய்தவர்களை வாட்ஸ்அப் வீடியோ கால் மூலம் கிரண்பேடி தொடர்பு கொண்டு மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com