Kidney Sale | தாங்க முடியாத `கடன் கொடுமை’ - கடைசியில் தனது கிட்னியையும் விற்ற விவசாயி

x

ரூ.1 லட்சம் பெற்ற கடனுக்காக கிட்னியை விற்ற விவசாயி

மகாராஷ்டிரா மாநிலம் சந்திரபூரில் ஒரு லட்சம் ரூபாய் கடனுக்காக தன்னுடைய சிறுநீரகத்தை விற்பனை செய்த அவலம் அரங்கேறி உள்ளது. விவசாயி ரோஷன் குடே, 2021ல் பெற்ற கடனுக்கு வட்டி மேல் வட்டி போட்டு 74 லட்சமாகியதாகவும், அதில் 34 லட்சம் ரூபாயை திருப்பி செலுத்தியும், மீதமுள்ள தொகைக்காக 8 லட்சம் ரூபாய்க்கு தனது சிறுநீரகத்தை விற்றுள்ளார். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், கடன் கொடுத்த நான்கு பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்