6 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை! குப்பையோடு குப்பையாக வீசிய கொடூரன்! கேரளாவை உலுக்கிய பயங்கரம்... மன்னிப்பு கேட்ட போலீஸ்

6 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை! குப்பையோடு குப்பையாக வீசிய கொடூரன்! கேரளாவை உலுக்கிய பயங்கரம்... மன்னிப்பு கேட்ட போலீஸ்
Published on

கேரளாவில், மாயமான பீகார் தம்பதியின் 6 வயது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு குப்பை கிடங்கில் சடலமாக மீட்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவத்தை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு....

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திற்கு உட்பட்ட முக்கம் பகுதியில் பீகாரை சேர்ந்த நபர் தன் மனைவி மற்றும் 4 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இதில் இவரின் 6 வயது மகள் துறுதுறுவென சுற்றித்திரிந்து வந்திருக்கிறார். திடீரென அந்த சிறுமி மாயமாகவே பதறிப்போனது அந்த மொத்த குடும்பமும்...

வீட்டின் அருகில் உள்ள இடங்கள் மற்றும் உறவினர்களது வீடு அனைத்து இடங்களில் தேடியும் மகள் கிடைக்காததால் பதறிப்போன தந்தை, போலீசில் புகாரளித்துள்ளார்...

சம்பவம் குறித்து விசாரணையை கையிலெடுத்த போலீசார், வீட்டின் அருகே இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி நடத்திய விசாரணையில், சிசிடிவியின் அவர்கள் கண்ட காட்சி பெரும் குழப்பத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது...

சிறுமி வசித்து வந்த குடியிருப்பின் மேல் வீட்டில் வசித்து வந்த அஸ்ஸாம் மாநில இளைஞரான அஸபாக் ஆலம், சம்பவத்தன்று சிறுமியை அழைத்து செல்வது சிசிடிவியில் பதவாகியிருந்தது..

அஸபாக் ஆலம் சென்ற சிசிடிவியை பின் தொடர்ந்து நடத்திய விசாரணையில், சிறுமியுடன் ஆலுவா பேருந்து நிலையத்திலிருந்து திரிச்சூர் செல்லும் பேருந்தில் அஸபாக் ஆலம் ஏறி சென்றது தெரியவந்தது.

தனிப்படை அமைத்து விசாரணையை துரிதப்படுத்திய போலீசார், அஸபாக் ஆலத்தை பிடித்த போது அவர் மதுபோதையில் இருந்தது போலீசாரை திக்குமுக்காட செய்தது...

சிறுமியை ஜாகீர் உசேன் என்பவரிடம் பணத்திற்காக விற்றதாக கூறி அஸபாக் ஆலம் வாக்குமூலம் அளித்தாரே தவிர, அதை தவிர்த்து எந்த தகவலையும் அவரிடம் இருந்து போலீசாரால் வாங்க முடியவில்லை...

இந்நிலையில், ஆலுவாவில் உள்ள சந்தைப் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார், அங்கு குப்பைகள் கொட்டும் பகுதியில் இருந்து சிறுமியை சடலமாக மீட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது...

குப்பை மேட்டின் சகதியினுள் புதைந்தவாறு சிறுமியின் உடல் கிடந்த காட்சி காண்போரை பேரதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், குழந்தை கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்...

அப்போது, போலீசாருக்கு கிடைத்த சிறுமியின் உடற்கூராய்வில், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது கேரளாவையே உலுக்கி புரட்டி போட்டது...

தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வரும் போலீசார், தனது முகநூல் பக்கத்தில் இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டு பதிவிட்டு இரங்கல் தெரிவித்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது...

இதனிடையே, விசாரணையின் போது மதுபோதையில் அஸபாக் ஆலம் உளறிக்கொட்டிய ஜாகீர் உசைன் குறித்தும், இந்த கொடூர சம்பவம் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்....

சிறுமிகளுக்கு நடந்து வரும் இதுபோன்ற கொடூரங்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது..

X

Thanthi TV
www.thanthitv.com