கேரளாவில் கனமழை, பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் : உலக மற்றும் ஆசிய வங்கி குழுவினர் நேரில் ஆய்வு

கேரளாவில் கனமழை, பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை, உலக மற்றும் ஆசிய வங்கி குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர்.
கேரளாவில் கனமழை, பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் : உலக மற்றும் ஆசிய வங்கி குழுவினர் நேரில் ஆய்வு
Published on
கேரளாவில் கனமழை மற்றும் பெரு வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை புனரமைக்க ஆசிய மற்றும் உலக வங்கி உதவ முன்வர வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில், அம்மாநில தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆசிய மற்றும் உலக வங்கி அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். புனரமைப்பு தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தி இருந்த நிலையில், 16 பேர் கொண்ட உலக மற்றும் ஆசிய வங்கி குழுவினர் பாதிக்கப்பட்ட ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com