கேரளா : புத்தகம், சீருடைகள் இல்லாமல் வந்த மாணவர்கள்

கேரள மாநிலத்தில் மழை நீர் வற்றியதால் இன்று பள்ளி மீண்டும் திறந்த நிலையில், சீருடைகள் இன்றி மாணவர்கள் வந்தனர்.
கேரளா : புத்தகம், சீருடைகள் இல்லாமல் வந்த மாணவர்கள்
Published on
கேரள மாநிலத்தில் வெள்ள பாதிப்பிற்கு பின்னர், பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. அரசு பள்ளியில் மாணவர்களுக்கு மன வலிமைக்கான உளவியல் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. ஆழப்புழா மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள் நீரில் மூழ்கிய நிலையில், ஜூலை 13 ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. தற்போது, மழை நீர் வற்றியதால் இன்று பள்ளி மீண்டும் திறந்த நிலையில், சீருடைகள் இன்றி மாணவர்கள் வந்தனர். வெள்ளத்தில் புத்தகம் சீருடைகள் அடித்துச் செல்லப்பட்டதால், மாணவ, மாணவிகள் வெறும் பைகளுடன் பள்ளி வந்தனர். அவர்களுக்கு ஆசிரியர்கள் மன வலிமைக்கான உளவியல் பயிற்சியை வழங்கினர்.
X

Thanthi TV
www.thanthitv.com