பொய்யான பாலியல் புகார் அளிக்கும் பெண்கள்.. கேரள ஐகோர்ட் அதிரடி உத்தரவு

x

பாலியல் வன்கொடுமை புகார் பொய்யானது என்று கண்டறியப்பட்டால், புகார்தாரர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கேரளா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கண்ணூரைச் சேர்ந்த ஒருவருக்கு முன்ஜாமின் வழங்கிய உத்தரவில் கேரளா உயர் நீதிமன்றம் முக்கியமான கருத்து தெரிவித்துள்ளது. அதில் பெண்கள் தாக்கல் செய்யும் அனைத்து பாலியல் வன்கொடுமை புகார்களும் உண்மையானதாக இருக்கும் என்று எண்ணவேண்டியதில்லை என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. பொய்யான குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருவதால் விரிவான விசாரணை அவசியம் என்றும் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்