Kerala | Wild water buffalo | கண்ணெதிரே பறந்த சிறுவன் குலைநடுங்கி ஓடிய மக்கள்
கண்ணெதிரே பறந்த சிறுவன் குலைநடுங்கி ஓடிய மக்கள்
கேரளாவில் சிறுவனை முட்டி வீசிய காட்டெருமை பதறவைக்கும் சிசிடிவி காட்சி கேரளாவில் காட்டெருமை தாக்கி சிறுவன் காயம். உரிய பாதுகாப்பு வழங்க கோரி மக்கள் சாலை மறியல். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மறையூரில், வீட்டின் அருகே பள்ளிப் பேருந்துக்காக காத்திருந்த மூன்றாம் வகுப்பு மாணவனை காட்டெருமை முட்டியதால், சிறுவன் படுகாயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனின் நெஞ்சில் பலத்த காயம் ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அப்பகுதியில் காட்டெருமை தாக்குதல்கள் வெகு நாட்களாக தொடர்வதாகவும் சிறுவனை தாக்கிய காட்டெருமை அங்கேயே சுற்றி வருவதாக கூறும் ஊர் மக்கள் , வனத்துறை உரிய பாதுகாப்பு வழங்கவில்லை எனக் குற்றம்சாட்டி சாலை மறியலில் ஈடுபட்டனர். காட்டெருமை சிறுவனை தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
