Kerala | Elephant Viral Video | யானை தாக்கி டிரைவர் துடிதுடித்து பலி - காரை முட்டித் தூக்கிய காட்சி

Kerala | Elephant Viral Video | யானை தாக்கி டிரைவர் துடிதுடித்து பலி - காரை முட்டித் தூக்கிய காட்சி
Summary

கேரளாவில் கோயில் திருவிழாவிற்காக அழைத்து வரப்பட்ட யானை மிதித்ததில் லாரி ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.. எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி அருகே, கிடங்கூர் மகாவிஷ்ணு கோவில் திருவிழாவிற்காக அழைத்து வரப்பட்ட யானை திடீரென ஆக்ரோஷமடைந்தது. முதலில் இது தொடர்பான பதறவைக்கும் காட்சிகளை காண்போம்.. மதம் பிடித்து ஓடிய யானை மிதித்ததில் விஷ்ணு என்ற லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். யானையைக் கட்டுப்படுத்த முயன்ற பாகன் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவலறிந்து வந்த வனத்துறையினரும் போலீசாரும் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு யானையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com