Kerala | Tiger | புலியை விரட்ட வெடித்த பட்டாசு - பயத்தில் ஊருக்குள்ளேயே புகுந்ததால் அதிர்ச்சி
கேரள மாநிலம் பச்சிலக்காடு அருகே புலியை விரட்ட வனத்துறையினர் பட்டாசு வெடித்த நிலையில், பயத்தில் புலி ஊருக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வனப்பகுதியில் இருந்து வெளியேறிய புலி, சீக்கல்லூர் வயல் அருகே உள்ள புதரில் ஓய்வெடுத்துள்ளது. மேலும் வனப்பகுதிக்குள் புலியை விரட்ட முற்பட்ட போது, புலி ஊருக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும் படி வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
Next Story
