kerala | மேற்கூரையை உடைத்து குடையால் சிசிடிவியை மறைத்து உள்ளே இறங்கிய திருடன்
கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் இருந்து சுமார் ஒரு லட்ச ரூபாயை திருடன் எடுத்துச் செல்லும், சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாவூர் பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டின் மேற்கூரையை உடைத்து உள்ளே இறங்கிய திருடன், கல்லாவில் வைக்கப்பட்டிருந்த பணத்தை திருடிச் சென்றுள்ளான். இது குறித்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
