

கேரள மாநிலம் திருவிதாங்கூர் தேவஸம்போர்டு ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட கோயில்களை நிர்வகித்து வருகிறது. அவற்றில், பட்டியலினத்தை சேர்ந்த 19 பேரை அர்ச்சகராக நியமிக்க திருவிதாங்கூர் தேவஸ்தானம் முடிவு செய்தது. இதன்படி, பட்டியலினத்தைச் சேர்ந்த18 பேரும், பழங்குடியினத்தை சேர்ந்த ஒருவரும் கோயில் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். பழங்குடி இனத்தில் இருந்து ஒருவர் கோயில் அர்ச்சகராக நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை. இதுகுறித்து தெரிவித்த தேவசஸ்ம்போர்டு அமைச்சர், கேரள வரலாற்றில் முதல் முறையாக, இவர் நியமிக்கப்பட்டு உள்ளதாக கூறினார். பட்டியல் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் பகுதி நேர அர்ச்சகர்களாக சிறப்புப் பிரிவின் கீழ் நியமிக்கப்பட்டு வருகிறார்கள் என்றார். ஆனால், அந்த சமூகத்தினர் குறைவாக தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.