Kerala | திடீரென கேட்ட பயங்கர சத்தம்.. பறந்து விழுந்த கலெக்டர் சென்ற கார்.. பதறவைக்கும் காட்சி
விபத்தில் சிக்கிய பத்தினம்திட்டா ஆட்சியர் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி
கேரளாவில் பத்தினம்திட்டா மாவட்ட ஆட்சியர் விபத்தில் சிக்கி காயமடைந்த நிலையில், ஆட்சியரின் கார் விபத்தில் சிக்கிய பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது...
கேரள மாநிலம் பத்தணந்திட்டா மாவட்ட ஆட்சியரின் கார் விபத்தில் சிக்கி கவிழ்ந்து மாவட்ட ஆட்சியர் காயமடைந்த சம்பவம் தொடர்பான நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி வைரல்
கேரள மாநிலம் பத்தணந்திட்டா மாவட்ட ஆட்சியராக செயல்பட்டு வரும் பிரேம் கிருஷ்ண்ன் நேற்று அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி சென்று கொண்டிருந்தார். , கோணி பகுதியில் செல்லும்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த காரும் மாவட்ட ஆட்சியரின் காரும் மோதி மாவட்ட ஆட்சியரின் கார் தலைகீழாக கவிழ்ந்தது. இந்த விபத்தில், மாவட்ட ஆட்சியர் பிரேம் கிருஷ்ணன், கண்மேன் மனோஜ், ஓட்டுநர் குஞ்சுமோன் ஆகியோர் காயமடைந்த நிலையில், பத்தனம்திட்டா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக நெஞ்சை பதறவைக்கும் வகையிலான சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது."
