விசாரணையில் கைநீட்டிய கேரள எஸ்.ஐ. | வெளியான பதைபதைக்கும் CCTV காட்சி
ஹோட்டல் தகராறு... விசாரணையின்போது எஸ்.ஐ தாக்கும் சிசிடிவி காட்சிகள்
கேரள மாநிலம் திருச்சூரில், உணவகத்தில் ஏற்பட்ட தகராறு தொடர்பான விசாரணையின்போது காவல்நிலையத்தில் ஆய்வாளர் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. திருச்சூர் மாவட்டம் பீச்சி பகுதியில், ஓசெப் என்பவர் நடத்தும் பாஸ்புட் கடைக்கு கடந்த மே மாதம் சென்ற பாலக்காட்டை சேர்ந்த ஒருவர், சாப்பாடு சரியில்லை எனக்கூறி ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து ஹோட்டல் மேலாளர் புகார் அளித்த நிலையில் ரகளையில் ஈடுபட்ட நபருக்கு ஆதரவாக போலீசார் செயல்பட்டதாக கூறப்படுகிறது. காவல்நிலையத்தில் விசாரணையின்போது, ஹோட்டல் மேலாளர் மற்றும் ஓட்டுநரை எஸ்.ஐ கன்னத்தில் அறைந்த காட்சிகள் வெளியாகின.
Next Story
